ஒலி,ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்க விழா, முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்..
புதுச்சேரி ஒலி,ஒளி அமைப்பாளர்கள் சங்கத்தின் 5ம் ஆண்டு துவக்க விழா தட்டாஞ்சாவடி சுப்பையா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் வெங்கடேச பெருமாள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செயலாளர் அன்பழகன், பொருளாளர் பாஸ்கரன்,துணை தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு சங்கத்தின் சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டார். மேலும் சங்க உறுப்பினர்களுக்கு டைரி மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து விழாவில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கு ஒலி, ஒளி அமைப்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், மத்திய அமைச்சர்கள், தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் அரசு விழாக்களில் ஒலி,ஓளி அமைப்பை சிறப்பாக அமைக்க வேண்டும் என உலகம் முழுவதும் உள்ள புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்றும்,ஒலி,ஒளி அமைப்பாளர் சங்கத்திற்கு புதுச்சேரி அரசு என்றும் துணை நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments